ஆயிரத்தில் ஒருவன் படத்தை சமீபத்தில் பார்த்தேன். அன்றைக்கு அந்தப் படத்தைப் பார்க்க வந்திருந்த பத்து பேரில் நானும் ஒருவன். என்னென்னமோ கிராபிக்ஸ் தொழில்நுட்பம் என்றெல்லாம் சொல்கிறார்களே என்றுதான் போனேன். இவ்வளவு கேவலமான படத்தை இதுவரை பார்த்ததில்லை. ஆபாசம், அருவருப்பு.. இவைகளோடு சோழ மன்னர்களையே இழிவுபடுத்தும் வகையில் கதையமைப்பு. எல்லாமே ஓட்டைதான்! என்ன கிராபிக்ஸும் தொழில் நுட்பமும் இருந்தாலென்ன? கந்தல் துணியைத் தங்க ஊசியால் தைப்பது போன்றதுதான்!
அதே சமயம் தமிழ்ப் படம் என்று ஒரு படம் பார்த்தேன், முழுக்க முழுக்க இதுவரை வெளியான எல்லாப் படங்களையும் நையாண்டி செய்திருந்தார்கள். ரொம்ப ரசிக்கும்படி இருந்தது. சரியான லொ¡ள்ளு படம்!
இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :
1. உங்கள் செல்போனிலிருந்துக்கு*#06# டயல் செய்யுங்க 2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும் 3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க.. 4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை cop@vsnl.netக்கு மெயில் பண்னுங்க! 5. போலீஸூக்கெல்லாம் போக வேண்டாம். 6. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க. 7. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்