இதுக்கு நான் ஐடியா கொடுப்பேன்னு நம்பி வந்தவர்களுக்கு, ‘நான் அந்த அளவுக்கு எல்லாம் பெரிய ஆள் இல்லீங்க’. இது எப்படின்னு தெரியாம ஒரு ஆளு கூட இல்லாம சுத்திக்கிட்டிருக்கற கொடுமையைப் பற்றி கொஞ்சம் எழுதலாம்ன்னு நெனச்சேன் அவ்வளவுதான். யாராச்சும் இந்த விஷயத்தில பெரிய ஆளுங்க இந்தப் பதிவப் பாத்தீங்கன்னா, தயவு செய்து உங்களோட பொன்னான அறிவுரைகளை வழங்குங்கப்பா.
சில பசங்க இருக்காங்க. நேத்துதான் அந்த பொண்ணப் பத்தி விசாரிச்சுக்கிட்டு இருப்பானுங்க. இன்னிக்குப் பாத்தா கூட சேர்ந்து காபி குடிக்கப் போயிட்டு இருப்பாங்க. இவனுங்களப் பாத்து வயிறு எரியதத் தவிர வேற எதுவும் பண்ண முடிந்ததில்லை.
கொஞ்ச நாள் பொறுத்து, பாஸ் ஆர்யா மாதிரி, ‘உங்களை எப்படி கரெக்ட் பண்ணறதுன்னே தெரியல. தயவு செஞ்சு உங்களை எப்படி கரெக்ட் பண்ணறதுன்னு சொல்லுங்க’ அப்படின்னு அந்தப் பொண்ணு கிட்டயே போய் கேட்டுடலாம்ன்னு இருக்கேன்